MARC காட்சி

Back
ஆனைமலை சமணக்குடைவரை
245 : _ _ |a ஆனைமலை சமணக்குடைவரை -
300 : _ _ |a குடைவரை
500 : _ _ |a ஆனைமலையில் உள்ள குகை தளத்தில் சமணர் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ள கல்வெட்டில், "இவ குன்றத்தூ உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரிட்ட காயிபன்" என்னும் இரண்டு வரிவாசகம் இடம் பெற்றுள்ளது. குன்றம் என்றால் மலை. இதில் "இவ குன்றம்" என்றால் ஆனைமலை என்று பொருள்படுகிறது. பா என்றால் படுக்கை. இக்கல்வெட்டில் உள்ள வரிகள் "தங்குவதற்கான கற்படுக்கை" என பொருள்படுகிறது. ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்டக்காயிபன் என்று சொல்லக்கூடிய இரண்டு சமண துறவியர் பெயர் காணப்படுகிறது. ஆனைமலையில் அமைந்துள்ள சமணர்கள் வாழ்ந்த குகையின் நெற்றிப்பகுதியில் 9 புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. முக்குடையின் கீழ் அமர்ந்துள்ள சமணதீர்தங்கரர் மகாவீரர், பார்தவநாதர், பாகுபலி, இயக்கி அம்பிகா, தாமரை மலர்கள் ஆகிய சிற்பங்கள் இன்றும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. மாமல்லபுரம் குடைவரை கோயில் போல இங்கு நரசிங்க பெருமாளுக்கும், முருகனுக்கும் கோயில்கள் உள்ளன.
510 : _ _ |a தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
520 : _ _ |a ஆனைமலையின் மேற்குச் சரிவில் நரசிங்கப்பெருமாள் கோயிலுக்கு அருகில் மலையின் நடுப்பகுதியில் இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் சமணர் படுக்கையும் வட்டெழுத்து, கிரந்தம், தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இங்குள்ள புடைப்புச் சிற்பங்களில் மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகா, இயக்கி ஆகியோர் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இச்சிற்பங்களும் சமணர்பள்ளியும் அச்சணந்தி என்ற சமணத் துறவியின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சிற்பங்கள் மீது சுதை பூசி வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. தீர்த்தங்கரரின் அருகில் கைவேலைப்பாடமைந்த ஒரு குத்து விளக்கும், இருமருங்கும் தாமரைகளும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. இவை பாண்டியர் காலத்தில் சமணர் இருக்கைகள் அனைத்தும் ஓவிய வல்லுநர்கள் பணிபுரிந்திருப்பார்கள் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. இங்குள்ள ஓவியங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. சைவ வைணவ சமயங்களின் எழுச்சிக்குப் பின் அச்சணந்தி என்ற சமணத்துறவி தமிழகம் முழுவதும் கால்நடையாகவே நடந்து சமணப்பள்ளிகளை நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
653 : _ _ |a தமிழ்நாடு, குடைவரை, குடவரை, குடைவரைக் கோயில்கள், தென்னகக் குடைவரைகள், தமிழ்நாட்டு குடைவரைக் கோயில்கள், பாண்டியர் குடைவரைகள், குகை, குகைக் கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை மரபுச் சின்னங்கள், புதுக்கோட்டை குடைவரைகள், திருக்கோகர்ணம், திருக்கோகர்ணம் குடைவரை, திருக்கோகர்ணம் சிவன் கோயில் குடைவரை, மரபுச் சின்னம், தொல்லியல் சின்னம், வரலாற்றுச் சின்னங்கள்
700 : _ _ |a சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a ஆனைமலை அடிவாரம் |c ஆனைமலை |d மதுரை |f மதுரை கிழக்கு வட்டம்
906 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 9.964349076446
915 : _ _ |a 78.186736054245
934 : _ _ |a ஆனைமலை நரசிங்கப் பெருமாள் கோயில், இலாடன் கோயில், ஆனைமலை பிராமிக் கல்வெட்டு
995 : _ _ |a TVA_MON_00095
barcode : TVA_MON_00095
book category : குடைவரைக் கோயில்கள்
cover :
Primary File :

TVA_MON_00095/TVA_MON_00095_மதுரை_ஆனைமலை_குடைவரைக்-கோயில்-0001.jpg

TVA_MON_00095/TVA_MON_00095_மதுரை_ஆனைமலை_குடைவரைக்-கோயில்-0002.jpg

TVA_MON_00095/TVA_MON_00095_மதுரை_ஆனைமலை_குடைவரைக்-கோயில்-0003.jpg

TVA_MON_00095/TVA_MON_00095_மதுரை_ஆனைமலை_குடைவரைக்-கோயில்-0004.jpg